விற்பனையாளர் நுகர்வோர் இருவரும் பயனடையும் வகையில் கோவையில் "பெர்க்ஸ்4 லாயல்டி" துவக்கம்

விற்பனையாளர்களும், பொருட்களை வாங்கும் நுகர்வோர்களும் என இருவரும் பயனடையும் வகையில் குரு குழந்தைவேல் மற்றும் வஞ்சிநாயகி ஆகியோர் இணைந்து கோவை மாவட்டத்தில் "பெர்க்ஸ்4 லாயல்டி" என்னும் துணை மார்க்கெட்டிங் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.



இந்த இணையதள வர்த்தக விற்பனையகம் மூலம் பிளிப்கார்ட், ஸ்நேப்டீல், மைந்தரா மற்றும் நூற்றுக்கணக்கான கம்பெனிகளின் இணையதள வர்த்தக தளங்களில் சென்று பொருட்கள் வாங்கினால் வாங்குபவர்களுக்கு 3 முதல் 12 சதவிகிதம் வரை சேமிப்பாகும்.

அதாவது, பெர்க்ஸ்4 நிறுவனம் மற்ற இணையதள விற்பனை நிறுவங்களுக்கு ஆர்டர் வாங்கித் தருவதால் அந்த நிறுவங்கள் பெர்க்ஸ் 4 லாயல்டிக்கு கொடுக்கும் கமிஷனில் பெரும் பகுதி நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறது.

www.perks4.in அல்லது மாணவர்களுக்கான மற்றும் ஊழியர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கென கட்டணம் எதுவும் இல்லை. பின் ஒவ்வொரு முறையும் எந்தப்பொருள் இம்முகவரியில் வாங்க விரும்பினாலும் பெர்க்ஸ்4 இணையபக்கத்தில் முதலில் நுழைந்து பின் அந்தந்த விற்பனை தளங்களுக்கு செல்ல வேண்டும். அதன் பின் அந்த இணையப்பக்கத்தில் இருக்கும் பொருளை வாங்கிக் கொள்ளலாம்.

இப்படி வாங்கினால் சுமாராக 3 முதல் 12 சதவிகிதம் வரை தொகையில் தள்ளுபடி கிடைக்கும். மேலும், பல விற்பனை நிலையங்கள் தங்கள் ஊழியர்கள் பயனடைய விரும்பினால் பெர்க்ஸ்4-ஐ அணுகலாம். அந்நிறுவனங்களுக்கு அதன் பெயரிலேயே இணையதளபக்கம் இலவசமாக அமைத்துக்கொடுக்கப்படும்.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குரு குழந்தைவேல் கூறுகையில், கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இதுவாகும். நாங்கள் இந்நிறுவனத்தை சுமார் 1 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கியுள்ளோம். எங்களது இணையதளம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இயங்கத் துவங்கியது. இந்த இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்க்கும் இடையே இருக்கும் தூரத்தைக் குறைக்க முடியும்.

தற்போதைய நிலையில் 800 இணையதள வர்த்தகர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் வர்த்தகர்களிடமும், உணவு விடுதி நிறுவனத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உள்ளூர் சந்தையிலும் இத்திட்டத்தின் பயன்களை அனுபவிக்க முடியும்" என்றார்.

இந்நிகழ்வுகளின் போது சிஎஸ்ஓ கே.தங்கராஜ், துணை மேலாளர், இயக்குநர் வாஞ்சி ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...